தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இன்று 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெயில் மிக கடுமையாக இருந்தது. வழக்கமாக ஏப்ரல் தொடங்கி மே மாதத்தில் வெயில் முடிந்துவிடும். ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வெயில் வாட்டி எடுத்தது. இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்பட்டது. அதற்கேற்றார்போல இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் வெயில் உச்சத்தை தொட்டது. ஆனால் இந்த வெயில்தான் வெப்பச்சலனத்தை ஏற்படுத்தி நல்ல மழையை கொண்டு வந்தது. எங்கெல்லாம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்ததோ அங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெயில் தணிந்து, பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை மறுநாள் தொடங்கி அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது. அதேபோல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Read More : உங்கள் உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதா..? மீண்டும் எப்படி அப்ளை செய்வது..?