fbpx

கோஷம் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.க்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி!. வைரலாகும் வீடியோ!

PM Modi: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சுமார் 135 நிமிட உரையின் போது, ​​எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், பிரதமர் மோடி ஒரு கிளாஸ் தண்ணீரை வழங்கிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு பிரதமர் பதில் அளித்து பேசினார். அப்போது, அவரை பேசவிடாமல் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனை மோடி பொருட்படுத்தாமல் பேசினார். மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது மோடிக்கு அலுவலக உதவியாளர் தண்ணீர் கொண்டு வந்தார். உடனே அதை, கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த , எம்.பி. ஒருவருக்கு வழங்கி அவரை ஆசுவாசப்படுத்தினார். இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Readmore: வாவ்…! ரூ.1,000 முதல் 25,000 வரை கல்வி உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிப்பது…?

English Summary

Prime Minister Modi gave water to the opposition MP who raised slogans! Viral video!

Kokila

Next Post

மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிரேடு 'பி' தேர்வு முடிவுகள் வெளியீடு...!

Wed Jul 3 , 2024
Release of Grade 'B' Examination Results conducted by Central Staff Selection Commission

You May Like