fbpx

வந்தாச்சு… இனி ஆன்லைன் மூலம் நிலத்தின் ஆவணங்கள் பார்க்கலாம்…! முழு விவரம்…

நில அளவை மற்றும் நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரங்களை அறிந்து கொள்ள புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், பல்வகையான நில ஆவணங்கள் கணினிப்படுத்தப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் கீழ்க்காணும் இணையவழிச்சேவைகள் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத் துறையால் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.

பட்டா மாற்றத்திற்கு இணையவழி மூலம் விண்ணப்பித்தல்: கிராமப்புறம். நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதே போல, நில உரிமைதாரர்கள் புல எல்லைகளை அளந்து அத்து காட்டக்கோருவதற்கு (F-Line Measurement) https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

எங்கிருந்தும் எந்நேரத்திலும் (Anytime Anywhere) என்ற இணையவழி சேவையினை (https://eservices.tn.gov.in) பயன்படுத்தி, கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, ‘அ’ பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை (F-Line report) ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையினை அறிந்து கொள்ளலாம்.

கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நிலஅளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் (Correlation Statements) போன்றவை https://tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

English Summary

Now you can view the land documents online

Vignesh

Next Post

ஜூலை மாதம் முழுவதும் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு & பாமாயில்...! அமைச்சர் கூறிய குட் நியூஸ்...!

Sat Jul 6 , 2024
Duvaram dal & palm oil in ration shops throughout the month of July...

You May Like