fbpx

சவுக்கு சங்கர் வழக்கில் இருந்து திடீரென விலகிய நீதிபதிகள்..!! என்ன காரணம்..?

சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் தலைமையிலான அமர்வு அறிவித்துள்ளது. இதையடுத்து, வேறு அமர்வில் வழக்கை விசாரணைக்கு பட்டியலிட பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.

பெண் போலீசாரை அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து அவரது தாய் கமலா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுசம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், உயர்நீதிமன்றத்தில் உள்ள வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரித்து அப்போது பதில் அளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனுதரார் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் ( வழக்கை விசாரிக்கும் அமர்வு ) குறித்து சில கருத்துகளை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேலும் இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்க விரும்பவில்லை. விசாரிப்பது சரியாகவும் இருக்காது. எனவே, வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்வதாக உத்தரவிட்டனர்.

Read More : ”பாகிஸ்தான் திருந்தவில்லை”..!! ”கார்கில் இழப்பில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை”..!! பிரதமர் மோடி காட்டம்..!!

English Summary

A bench headed by Justice MS Ramesh has announced that it will withdraw from the hearing of the recruitment petition challenging the arrest of Chavik Shankar under the Gangster Act.

Chella

Next Post

Poco M6 Plus | அட்டகாச அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் Poco M6 Plus..!! இதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

Fri Jul 26 , 2024
Poco M6 Plus to be launched in India in August: All we know

You May Like