fbpx

மகிழ்ச்சி…! அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் தொடர்ந்து வழங்கப்படும்…!

அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடப் புத்தகங்களின் விற்பனை விலையை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்போதைய உற்பத்தி செலவை பொறுத்து விலையானது மறு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 2018-2019-ம் கல்வியாண்டில் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்பட்ட போது விலை உயர்த்தப்பட்டது.

தரம் உயர்ந்த எலிகண்ட் பிரின்டிங் பேப்பர் 80 ஜிஎஸ்எம் தாள் மற்றும் 230 ஜிஎஸ்எம் ஆரா போல்டு புளுபோர்டு மேலட்டை கொண்டு புத்தகங்கள் அச்சிடப்பட்டதால் விலையானது உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலில் புத்தகங்களின் உற்பத்தி செலவீனம் தற்போது கணிசமாக உயர்ந்துவிட்டது. அதாவது, 2018-2019-ம் ஆண்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டதைவிட தற்போது புத்தகங்களுக்கான உற்பத்தி பொருட்களான தாள் 55 சதவீதமும், மேலட்டை 27 சதவீதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக ஒரு புத்தகத்துக்கான உற்பத்தி செலவீனம் நிர்ணயிக்கப்பட்ட விற்பனை விலையைவிட சராசரியாக 45 சதவீதம் வரை அதிகரித்துவிட்டது. இதையடுத்து, நடப்பாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.90 வரை உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30-40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30-50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40–70 வரையும், 9-12 வகுப்புக்கு ரூ.50–90 வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பெரியளவில் பாதிப்பு இருக்காது. மேலும், அரசு, அரசு உதவி பள்ளிகளின் மாணவர்களுக்கு தொடர்ந்து இலவசமாக புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

English Summary

Free books will continue to be provided to government school students

Vignesh

Next Post

நன்கொடையாளர் மட்டும்தான்!. கருமுட்டை தானம் செய்தவர்களுக்கு குழந்தை மீது உரிமை கிடையாது!. நீதிமன்றம் அதிரடி!

Wed Aug 14 , 2024
Donors are the only ones who have donated eggs! There is no right over the child! Court action!

You May Like