தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் எ.வ.வேலு இருவரும் ரகசியமாக பேசிக்கொண்டனர்.
நாட்டின் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்தனர். அதனால் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்வில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க வந்த அண்ணாமலை, அங்கு அமர்ந்திருந்த அமைச்சர்களுக்கு வணக்கம் வைத்துவிட்டு புறப்பட்டார். அப்போது, அவரின் கையை பிடித்த அமைச்சர் எ.வ.வேலு சில நிமிடம், தனிப்பட்ட முறையில் ரகசியமாக பேசினார். இது குறித்த கேள்விக்கு, எங்கு நாகரீகமாக அரசியல் செய்ய வேண்டுமோ, அங்கு அரசியல் செய்ய வேண்டும். எங்கு மக்களுக்கு சண்டை போட வேண்டுமோ, அங்கு சண்டை போட வேண்டும் என அண்ணாமலை கூறினார்.