அடுத்த வாரம் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை குறைக்கப்பட்டு 220 வேலை நாட்களாக உயர்த்தப்பட்டது நடப்பு கல்வியாண்டின் தொடக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வழக்கமாக 210 நாட்கள் மட்டுமே செயல்படும் நிலையில் கூடுதலாக 10 சனிக்கிழமைகளில் பள்ளிகள் வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தினத்தை ஒட்டி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இடையில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் இருப்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டது, சனி, ஞாயிறு விடுமுறை உடன் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அமைந்தது. எனவே நான்கு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும் நிலை ஏற்பட்டது.
தற்போது அடுத்த வாரம் திங்கள்கிழமை கோகுலாஷ்டமிக்கு அரசு விடுமுறை, அதற்கு முந்தைய நாள் ஞாயிற்றுக்கிழமை. இடையில் சனிக்கிழமை அன்று தமிழக அரசு விடுமுறை அளிக்கும் பட்சத்தில் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது. சனிக்கிழமை அரசு விடுமுறை வழங்குமா இல்லையோ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.