fbpx

தப்பிச் சென்ற ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்..!! கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் பிடிக்க முயலும் போது பதில் தாக்குதல் நடத்தும் ரவுடிகளை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வரிசையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடி ஒருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் கரும்பாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் என்ற தூத்துக்குடி செல்வம். இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் உள்ளன. நாகர்கோவில், அஞ்சுகிராமம், சுசேந்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கொலைகள் தொடர்பாக போலீசார் இவரை தேடி வந்தனர். இருப்பினும் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்நிலையில் சுசீந்திரம் பகுதியில் ரவுடி தலைமறைவாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரவுடி செல்வதை பிடிக்க உதவி காவல் ஆய்வாளர் லிபி பால்ராஜ் பிடிக்க முயன்ற போது அரிவாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றுள்ளார். அப்பொழுது அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு ரவுடி செல்வத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து ரவுடி செல்வம் நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரவுடி துப்பாக்கியால் சுட்டி பிடிக்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more ; தவணை முறை வீடு விற்பனை நிறுத்தம்..!! –  தமிழக வீட்டு வசதி வாரியம் அதிரடி

English Summary

The shooting of a raider who tried to escape after attacking an assistant police inspector near Kanyakumari has created a stir in the area.

Next Post

Vedio | மாடியில் இருந்து விழுந்த ஏசி.. நொடியில் உயிரிழந்த இளைஞர்..!! - நெஞ்சை பதற வைக்கும் வீடியோ!!

Mon Aug 19 , 2024
An 18-year-old boy died when an air conditioner accidentally fell from the third floor.

You May Like