fbpx

அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.. அரைவேக்காடு தனமாக அரசியல் செய்கிறார்..!! – செல்லூர் ராஜூ தாக்கு

மதுரை மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாநகர செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்தது. அதன்பிறகு செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ”அண்ணாமலை பற்றி நிறைய பேசலாம். தப்பாகப் போய்விடும். பிறகு அது மீம்ஸ் வடிவில் வந்துவிடும். தேர்தல் நேரத்தில் அண்ணாமலை திமுகவையும், அதன் தலைவர்களையும் மிக கேவலமாக பேசினார்.

இப்போது கைப்பேசியில் வந்த அழைப்பின் பேரில் அண்ணாமலை கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் ஓடோடி சென்று பங்கேற்றுள்ளார். திராவிட கட்சிகளை விமர்சனம் செய்து பேசிய அண்ணாமலை தற்போது புகழ்ந்து பேசி மாட்டிக் கொண்டார். ஆடு சரியாக மாட்டிக் கொண்டது. பயத்தின் காரணமாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்து முதல்வர் விழா நடத்தி உள்ளார்.

அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசின் விசாரணை துறைகளுக்கு பயந்து மத்திய அரசை அழைத்து விழா நடத்தி உள்ளனர் திமுகவினர். அரசியலில் தான் ஒரு கத்துக்குட்டி என்ற விஷயத்தை அண்ணாமலை மீண்டும் நிரூபணம் செய்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அண்ணாமலை அரை வேக்காட்டு தனமாக பேசி வருகிறார்.

நடிகர் விஜய் அரசியல் களத்திற்கு இன்னும் வரவே இல்லை. ஒரு இளைஞர் அரசியலுக்கு வருகை தர இருப்பதை திமுக அரசு தடுக்கிறது. காரணம் தமிழகத்தில் தங்கள் கட்சியைத் தவிர வேறு எந்த கட்சியும் இருக்கக் கூடாது என திமுக நினைக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ஏன் திமுக அரசு அனுமதி மறுக்கிறார்கள்? இது மிகவும் கண்டிக்கத்தக்கது” என பேசியுள்ளார்.

Read more ; கொல்கத்தா பெண் மருத்துவர் கொடூர கொலை..!! மூடி மறைக்கப்படும் உண்மைகள்? வங்காள வரலாற்றில் கருப்பு பக்கம்..!!

English Summary

Former AIADMK minister Sellur Raju has said that Annamalai is doing politics half-heartedly.

Next Post

பச்சை மிளகாயை இப்படி செய்து குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Thu Aug 22 , 2024
In this post, we will know about the benefits of soaking green chillies for a week and drinking its water for your body.

You May Like