fbpx

குட் நியூஸ்… அரிசி அட்டைதாரர்களுக்கு புதிய ரேஷன் கார்டு… ஊழியர்களுக்கு மானிய தொகை…!

தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில் ஒன்றுதான் பொது விநியோகத் திட்டம். தமிழகம் முழுவதும் 39 மாவட்டங்களில் 33,000 ரேஷன் கடைகள் உள்ளன. 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 674 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் ரேஷன் கடைகளை நடத்துகின்றன. ரேஷன் கடை வாடகை, மின் கட்டணம், ஊழியர்கள் சம்பளம், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளுக்கு, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்குகிறது.

இந்த மானியம் குறித்த காலத்தில் வழங்கப்படுவதில்லை. அதனால், செலவுகளை சமாளிக்க முடியாமல், சங்கங்கள் நிதி நெருக்கடியில் திணறி வருகின்றன. ரேஷன் கடை செலவுகளுக்காக கூட்டுறவு துறைக்கு ஆண்டுதோறும் சராசரியாக, 450 கோடி ரூபாயை, அரசு மானியமாக வழங்குகிறது. அரசு விடுவிக்கும் மானியம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, ரேஷன் கடைகளை நடத்தும் ஒவ்வொரு சங்கங்களுக்கும் வழங்கப்படுகிறது.

கடந்த, 2021 – 2022 மானியத்தில், 3 சதவீதம்; 2022 -2023ல் மொத்தம் 51 சதவீதம்; 2023 – 2024ல் மொத்தம் 40 சதவீதம் நிலுவை என, 750 கோடி ரூபாய் தர வேண்டியுள்ளது. மானிய தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

புதிய ரேஷன் அட்டை:

சுமார் 80,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. அதேபோல, 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில், சுமார் ஒரு லட்சம் பேருக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் சரிபார்க்கும் பணி முடிந்து அட்டைகள் வழங்கப்படும் என்றும், தவறான தகவல்களை வழங்கிய காரணத்தால் ஆயிரக்கணக்கானோரின் விண்ணப்ங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

English Summary

New ration card for rice card holders… Subsidy amount for employees

Vignesh

Next Post

இந்த ராசிக்காரர்கள் உஷாரா இருங்க..!! எல்லா பிரச்சனையும் வரப்போகுது..!!

Tue Sep 10 , 2024
Skywatchers around the world will be treated to a partial lunar eclipse on September 18.

You May Like