fbpx

ஹஜ் புனித பயணம் செய்ய விண்ணப்பிக்க செப்.23-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு…!

இந்திய ஹஜ் குழுவானது புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்திய ஹஜ் குழுவானது. புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 23.09.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 15.01.2026 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம். குழுத் தலைவரின் இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு கூடுதல் விவரங்களை www.hajcommittee.gov.in என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

English Summary

The deadline for applying for Haj pilgrimage has been extended till September 23

Vignesh

Next Post

'மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்’..? திமுக அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்..!!

Wed Sep 11 , 2024
Thirumavalavan has said that AIADMK may also come to VISA's anti-liquor conference.

You May Like