fbpx

வங்க கடல் பகுதிகளில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி…!

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இன்றும், நாளையும் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வரும் 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும், 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல்வரும் 26-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

A low pressure area is likely to develop over central West Bengal today.

Vignesh

Next Post

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024!. அகமதாபாத்தை சேர்ந்த ரியா சிங்கா முடிசூட்டப்பட்டார்!

Mon Sep 23 , 2024
Rhea Singha crowned Miss Universe India 2024

You May Like