தமிழ் சினிமாவில் மிக இளம் வயதிலேயே இயக்குனராக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி வெற்றிகளைக் குவித்தவர் செல்வராகவன். அவர் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி ஆகிய படங்கள் வணிக ரீதியாகவும் புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் கமர்ஷியலாக வெற்றிப் பெறாவிட்டாலும் நல்ல விமர்சனங்களையும் குவித்தன.
ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியைக் கண்டு வருகின்றன. இடையில் அவர் சாணிக் காயிதம் திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றார். இயக்குனர் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2019 விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு தன்னுடைய உதவி இயக்குனர் ஆன கீதாஞ்சலி ராமன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லீலாவதி, ஓம்கர், ரிஷிகேஷ் என மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.
தொடர்ந்து திரைப்படங்கள் எடுப்பதிலும் , நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வரும் செல்வராகவன் சமீபத்தில் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார். அந்த பதிவு தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது. காதல் தோல்வியோ, மனைவியுடன் சிக்கலோ, வேலையில் பிரச்சனையோ, எந்த காரணத்தை கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள். இந்த உலகம் உங்களை ஏறி மிதித்து விட்டுப் போகுமே தவிர அந்த நேரத்தில் ஆறுதல் சொல்லாது.
செருப்பை போட்டுக் கொண்டு கடமையை செய்ய கிளம்பி விடுங்கள் என செல்வராகவன் கூறி பதிவிட்டு இருக்கிறார். அவரின் இந்த பதிவுக்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வருகிறார்கள். தனுஷ் -ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் ,- சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி இப்படி அடுத்தடுத்து நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்து செய்திகள் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சமயத்தில் செல்வராகவனின் இது போன்ற பதிவு தற்போது கவனம் ஈர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read more ; எப்புட்ரா.. ரெண்டு குண்டு பல்பு-க்கு கரெண்ட் பில் ரூ.1,01,580..!! ஷாக் ஆன விவசாயி