fbpx

இன்று எந்தெந்த மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…? வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை

கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக 14-ம் தேதி வரை மழை நீடிக்கும். திருநெல்வேலி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது..தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

11-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Which district is likely to rain today?

Vignesh

Next Post

தமிழகம் முழுவதும் அக். 15-ல் சிறப்பு மருத்துவ முகாம்!. பருவமழை முன்னேற்பாடுகள் தீவிரம்!. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

Wed Oct 9 , 2024
Monsoon will increase intensity!. All over Tamil Nadu. Special medical camp on the 15th! Minister Subramanian!

You May Like