fbpx

BREAKING | தொடர் கனமழை..!! இந்த மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதில், இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதற்கு ஏற்றார்போலே நேற்று முன்தினம் முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

அந்த வகையில், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. தொடர்ந்து விடாமல் பெய்த மழையால், ஒருசில இடங்களில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் போலீஸ் வாகனம் சிக்கியது. இதேபோல் ஆட்டோ ஒன்று மழை நீரில் சிக்கிய நிலையில், அதில் இருந்த 3 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல், நாளை (15ஆம் தேதி) முதல் 18ஆம் தேதி வரை தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read More : 10 ரூபாய் நோட்டு இனி புழக்கத்தில் இருக்காதா..? ரிசர்வ் வங்கியில் என்ன நடக்கிறது..?

English Summary

Chief Minister Mukherjee Stalin has instructed that schools and colleges should be given holiday in districts including Chennai, Kanchipuram, Chengalpattu, Thiruvallur.

Chella

Next Post

இவர்களெல்லாம் நெய் சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.. எவ்வளவு சேர்த்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது?

Mon Oct 14 , 2024
Here we will learn in detail about the benefits and harms of eating ghee.

You May Like