fbpx

கிடு கிடுவென குறைந்த காய்கறி விலை.. கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி வெங்காயம் விலை இவ்வளவுதானா.?

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சமீபத்திய மழை மற்றும் வெயிலின் காரணமாக அதிகரித்தது. தற்போது, வரத்து அதிகரிப்பால் விலைகள் குறைந்துள்ளன. தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலைகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காய்கறி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் திடீரென வெளுத்து வாங்கிய வெயிலும் ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. இதனால் காய்கறி வரத்து குறைந்ததையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது.

ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கும், பீன்ஸ் 250 ரூபாய்க்கும், அவரைக்காய் 100 ரூபாய்க்கும், வெங்காயம் 80 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 60 ரூபாய்  என இரு மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.   இதனால் இல்லத்தரசிகள் அதிக விலை கொடுத்து வாங்க சிரம்ப்பட்டனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு குட் நியூஸ் தரும் வகையில் காய்கறிகளின் விலையானது சற்று குறைந்துள்ளது.

இன்றைய காய்கறி விலை : சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

நெல்லிக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்கால் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பீன்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20-க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; எடை இழப்புக்கு ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியான காலை உணவுகளை எடுத்துக் கொள்ள கூடாது..!! – ஆய்வு

English Summary

Low vegetable prices. You can see today’s vegetable price in Koyambedu market in this post

Next Post

ரேஷன் கடைகளில் வரப்போகும் இந்த மாற்றத்தை கவனிச்சீங்களா..? திடீரென பறந்த உத்தரவு..!! குடும்ப அட்டைதாரர்கள் குஷி..!!

Fri Oct 25 , 2024
The Department of Cooperatives has directed the Zonal Joint Registrars to open savings accounts in cooperative banks and provide banking services.

You May Like