வைரத் தொழிற்சாலையின் மேலாளர் ஒருவர், குஜராத்தில் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 41. இவர், அங்குள்ள கஷ்டப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு நிதி உதவி செய்து வந்துள்ளார். திடீரென ஒரு நாள், இவர் தான் உதவி செய்து வந்த குடும்பத்தில் உள்ள ஒரு சிறுமியை தன்னுடன் மும்பைக்கு அழைத்துள்ளார். அப்படி அவர் வர மறுத்தால், நிதி உதவி வழங்குவதை நிறுத்தி விடுவதாக கூறி, அந்த குடும்பத்தை மிரட்டியுள்ளார். இதனால் திகைத்துப்போன தாய், தனது குடும்ப சூழ்நிலையால் சிறுமியை மேனேஜருடன் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அந்த நபர் சிறுமியை மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள ஓட்டல் ஒன்றில் அந்த சிறுமி தன் மகள் என பொய் சொல்லி போலி ஆதார் கார்டையும் பயன்படுத்தி ரூம் எடுத்துள்ளார். மேலும், அந்த அறையில் சிறுமியை அவர் பலாத்காரம் செய்யும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன சிறுமி இது குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமி தனது குடும்பத்தில் உள்ளவர்கள் வற்புறுத்தியதால் இங்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
Read More: “முகுந்தின் ஜாதி பேர் சொல்ல உங்களுக்கு என்ன கேடு?” ஜாதியை மறைத்ததால் கொந்தளித்த நடிகை..