TCS எனும் Tata Consultancy Services நிறுவனம் நாட்டின் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. டாடா குழுமத்தை சேர்ந்த இந்த நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தற்போது சென்னையில் செயல்பட்டு வரும் டிசிஎஸ் நிறுவனத்தில் Process Associate பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பணியிடம் : Dotnet Core Developer
என்னென்ன தகுதி?
* இந்த பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
* குறிப்பிட்ட துறையில் 6 முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
* Net Core, Asp.net, C#.Net, HTML, CSS, REST API, SQL, Cloud DB’s உள்ளிட்டவை டெக்னிக்கல் ஸ்கில்ஸாக தெரிந்திருக்க வேண்டும்.
* Couchbase, Kafka, Oracle தெரிந்திருந்தால் அது விண்ணப்பம் செய்வோருக்கு பிளஸ் பாயிண்ட்டாகும்.
* இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் எண்ட் டூ எண்ட் டெவலப்மென்ட் பேக் எண்ட், டேட்டா ஸ்டோரேஜ் ஹேண்டில், தினசரி டாஸ்க் மற்றும் Bugs உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
சம்பளம் : தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் பற்றிய எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவின்போது அதுபற்றிய விபரம் என்பது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்.இதனால் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடப்படவில்லை. இதனால் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.
Read more ; ஹனிமூன் செலவு.. குழந்தை பெற்ற பெண்களுக்கு மாதம் ரூ.26,000..!! ரஷ்யா போட்ட பிளான்.. இதுதான் செக்ஸ் அமைச்சகமா?