சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. பெண்கள் வெளியிடங்களில் மட்டும் இல்லாமல், தனது சொந்த வீடுகளிலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறாள். அந்த வகையில், உத்தரப் பிரதேசத்தில் பெண் ஒருவருக்கு நடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் பார்ணா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமணமான ஒரு சில மாதங்களில், இவருக்கும் இவரது மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த பார்ணா, தனது கணவருடன் தன் தாய் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். பார்ணாவின் தாய், உயிரிழந்த நிலையில், அந்த வீட்டில் அவரது தந்தை மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், பார்ணாவின் கணவர் வீட்டில் இல்லாத போது, அவரது தந்தை பலமுறை தான் பெற்ற மகளை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நடக்கும் கொடுமையை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்த பார்ணா, 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவரது தந்தையின் கொடுமைகளை சகித்து வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் தந்தையின் தொல்லை அதிகரித்ததையடுத்து, இதனால் விரக்தி அடைந்த பார்ணா, தனது தந்தையின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளார். இதையடுத்து, பார்ணா ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் தனது தந்தை மீது புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 60,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். பெற்ற மகளை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: சின்னத்திரையில் களமிறங்கும் விஜய் ஆண்டனி… எந்த ஷோவில் தெரியுமா??