fbpx

பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்..

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதியில் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிறுமிக்கு பள்ளியில் கணித தேர்வு நடந்துள்ளது. இதனால் அவர் தனது பள்ளியில் தேர்வு எழுதி விட்டு, வழக்கம்போல் அரசு பஸ்சில் ஏறி பெருஞ்சிலம்பு பகுதியில் இறங்கியுள்ளார். பின்னர் தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் தன்னிடம் உள்ள சாவியை வைத்து கதவை திறக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது, மாணவியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், தனது கைக்குட்டையை வைத்து திடீரென மாணவியின் முகத்தில் அழுத்தியுள்ளார். இதனால் மாணவி மயங்கியுள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து மாணவி கண் திறந்து பார்த்தபோது, அவர் தனது வீட்டிற்குள் ஆடைகள் கலைந்து இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, மயக்க மருந்து கலந்த கைக்குட்டையை வைத்ததில் தான் மயங்கியதும், தன்னை பன் தொடர்ந்து வந்த நபர் தன்னை பலாத்காரம் செய்து விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தனது வீட்டில் கூறினால், தனது பெற்றோர் தன்னை தவறாக நினைத்து விடுவார்கள் என்ற அச்சத்தில், சிறுமி இது குறித்து யாருடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில், மாணவின் தனது குடும்பத்துடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் கூத்தாட்டுகுளம் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார். மாணவி தந்தையின் வேலை நிமித்தமாக குடிபெயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. திடீரென மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர் மாணவியை எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நடந்ததை குறித்து விசாரித்துள்ளனர். அப்போது மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி அழுதுள்ளார்.

இதற்க்கிடையே, சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், மாணவியை பலாத்காரம் செய்தவர் யார் என்பதை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Read more: “நீங்களும் என் காதலி கூட உல்லாசமா இருங்கடா”; இன்ஸ்டாகிராம் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்..

English Summary

school-girl-was-sexually-abused-while-returning-to-home-from-schoo

Next Post

ஆண் நண்பருடன் இரண்டு நாட்கள் உல்லாசம்.. திடீரென மயங்கி விழுந்த இளம் பெண் பலி..!!

Tue Dec 10 , 2024
A young beautician, who had been flirting with her boyfriend for 2 days, suddenly fainted and died.

You May Like