fbpx

அவசரம்..! காலை 8 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறப்பு…!

செம்பரம்பாக்கம் ஏரியில் காலை 8 மணிக்கு நீர் திறக்கப்பட உள்ளது. ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அறிவிப்பு .

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். இன்று (13.12.2024) காலை 6 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.29 அடியாகவும், கொள்ளளவு 3453 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 6498 கன அடியாகவும் உள்ளது. ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Adayar River) ஏரியிலிருந்து இன்று 13.12.2024 காலை 08.00 மணியளவில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

எனவே, ஏரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர், காவனுர், குன்றத்துர். திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

English Summary

1,000 cubic feet of water per second released into Chembarambakkam Lake at 8 am

Vignesh

Next Post

கைரேகைகள் மூலம் புற்றுநோய் வகைகளை அடையாளம் காணலாம்!. ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும்!. புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

Fri Dec 13 , 2024
Fingerprints: பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு தனித்துவமான ‘மூலக்கூறு கைரேகைகளில்’ இருப்பதாக சமீபத்திய கண்டுபிடிப்பு வெளிப்படுத்தியுள்ளது. புற்றுநோய் போன்ற கொடிய நோயில், அறிவியல் ஒரு பெரிய படி முன்னேறியுள்ளது. பார்சிலோனாவின் மரபணு ஒழுங்குமுறை மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளனர், இது பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு தனித்துவமான ‘மூலக்கூறு கைரேகைகள்’ இருப்பதைக் காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்பு புற்றுநோயை முன்பை விட வேகமாகவும் துல்லியமாகவும் கண்டறிய உதவும். மனித கைரேகைகள் இப்போது […]

You May Like