தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதால், ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. அடுத்த ஆண்டில் எந்தெந்த நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என்பதற்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே, எந்தெந்த தேதிகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகள் இயங்காது. ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம்ஜன 26, பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசம், மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதேபோல், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : கத்தரிக்காய் இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்டதா..? இந்த நோய்களுக்கு இதுதான் அருமருந்து..!!