fbpx

பூதாகரமான அம்பேத்கர் விவகாரம்.. காங்கிரஸ்-க்கு எதிராக ட்வீட் போட்ட மோடி.. அமித்ஷா உடன் ராகுல் காந்தியை சந்தித்தது ஏன்..?

அம்பேத்கரின் பெயருக்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில், அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளது.

நேற்று மக்கள் அவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்றைய விவாதம் முடிவடைந்த பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டை குறிக்கும் விவாதம் நடைபெற்றது. இது தொடர்பாக மாநிலங்கள் அவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள்.

கடவுளின் பெயரை பலமுறை சொன்னால் அவர்களுக்கு சொர்க்கத்தில் ஆவது இடம் கிடைக்கும். அம்பேத்கரின் பெயரை நீங்கள் 100 சதவீதம் பயன்படுத்துங்கள். ஆனால் அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்தது.

எதிர் கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதுதொடர்பாக வெளியிட்ட எக்ஸ் பதிவில், அம்பேத்கர் கோட்பாடுகளை பாஜக பின் பற்றி வருகிறது. அம்பேத்கரை பாஜக மதிக்கிறது. அவரின் கனவுகளை எங்கள் ஆட்சியில் நிறைவேற்றி வருவதாக கூறினார்.

தொடர்ந்து அம்பேத்கரை அவமதிப்பது காங்கிரஸ் கட்சியினர் எனவும் குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார். அதன் பின்னர், இந்த விவகாரத்திற்கு கண்டனம் எழுந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் அமித்ஷா உடன் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஹூன கார்க்கே, மற்றும் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more ; தென்மேற்கு வங்கக் கடலில் வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

English Summary

PM Modi, Amit Shah Meet Rahul Gandhi, M Kharge Amid Huge Row Over Ambedkar

Next Post

”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது”..!! சென்னைக்கு சரியான சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!

Wed Dec 18 , 2024
The India Meteorological Department has reported that the low-pressure area that formed in the Bay of Bengal has strengthened into a deep depression.

You May Like