fbpx

மாஸ்…! இன்று காலை 10.30 மணிக்கு 71,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி ஆணை வழங்கும் மோடி…!

புதிதாக பணி நியமனம் செய்யப்பட உள்ள 71,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10:30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் பணி ஆணை வழங்குகிறார்.

நாடு முழுவதும் 71,000 க்கும் மேற்பட்ட பணி நியமனக் கடிதங்களை புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10:30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் பணி ஆணை பெறும் நபர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார். வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வேலைவாய்ப்பு திருவிழா அமைந்துள்ளது.

தேச கட்டமைப்பு மற்றும் சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்கேற்புக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை இது வழங்கும். நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெற உள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான பணி நியமனங்கள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நியமனங்கள், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌

English Summary

Modi to issue job orders to over 71,000 people at 10.30 am today…

Vignesh

Next Post

சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொள்வது குற்றமாகாது..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

Mon Dec 23 , 2024
The court has issued a sensational ruling, stating that sex with a corpse is not a crime of violence.

You May Like