fbpx

“என்னயவே டார்ச்சர் பண்ணுவியா நீ” தன்னை சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி செய்த காரியம்..

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜர் நகரில் 46 வயதான சந்தன மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 39 வயதான பாண்டிச் செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ள நிலையில், திடீரென சந்தன மாரியப்பனுக்கு கண் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கை, கால் செயல்படாமல் இருந்துள்ளார். இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். ஆனால் குடும்ப பொருளாதார காரணமாக பாண்டிச்செல்வி கூலி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாண்டிச் செல்வி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக போலசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், சந்தன மாரியப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில், சந்தன மாரியப்பன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.

விசாரணையில், சந்தன மாரியப்பன் தனது மனைவி பாண்டிச் செல்வியை சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி பாண்டிச் செல்வி, தனது கணவரை கொலை செய்துள்ளார். இதனையடுத்து, தளவாய்புரம் போலீஸார் இது குறித்து கொலை வழக்குப் பதிவு செய்து பாண்டிச்செல்வியை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், பாண்டிச் செல்விக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்துள்ளார்.

Read more: பள்ளி சிறுவன் மீது ஏற்பட்ட ஆசை; வேறு ஊருக்கு அழைத்துச் சென்று இளம்பெண் செய்த காரியம்..

English Summary

woman killed her husband who tortured her

Next Post

"எனக்கு குழந்தைகள் முக்கியம் இல்லை, கள்ளக்காதலன் தான் முக்கியம்" வீட்டை விட்டு ஓடிய மனைவி; ஆத்திரத்தில் முதல் கணவன் செய்த காரியம்..

Tue Jan 28 , 2025
first husband killed her wife's lover

You May Like