Mutton liver VS Chicken liver: மட்டன் வகை என்றாலும், ஆட்டு கல்லீரலில் கலோரிகள் குறைவாகவே இருக்கிறது.. கோழி, மாட்டிறைச்சியின் கல்லீரலைவிட, ஆட்டு கல்லீரலில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ளதால், நன்மையையே தருகிறதாம். முக்கியமாக இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்வதில், ஆட்டு ஈரல்களுக்கு பெரும் பங்கு உள்ளது.. இதனால், அனீமியா என்று சொல்லப்படும் ரத்த சோகை குறைபாடு நீங்குகிறது.. ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளளவர்களும், உடல் மெலிந்து பலமில்லாமல் இருப்பவர்களும் வாரம் ஒருமுறையாவது இந்த ஈரலை சாப்பிடலாம்.
குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே அசைவம் எது தெரியுமா? அது ஆட்டு ஈரல் மட்டும்தானாம்.. அதனால்தான் மட்டன் வாங்கும்போது, அதில் கூடுதலாக ஈரலையும் சேர்த்து சமைக்க சொல்கிறார்கள். அல்லது தனியாகவே சமைத்தும் சாப்பிடலாம். புரதம்,கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு, கார்போஹைட்ரேட்டுகள், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், செலினியம் , வைட்டமின் A, B, B6, B9m C, D, D3, கரோட்டினாய்டுகள் இப்படி ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுதான் ஆட்டு ஈரல்கள்.
சிக்கன் ஈரலில் புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமிண் 12, வைட்டமிண் ஏ, ஃபோலேட், செலீனியம் இதில் உள்ளது. உங்களின் மூளை ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமிண் பி12 அதிகம் உதவும். செலிமியம் உங்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்தை குறைக்கும். மேலும், ரத்த சர்க்கரை அளவும் கட்டுக்கோப்பாக இருக்கும். எனவே நீரிழிவு நோயாளிகளும் இதனை சாப்பிடலாம். ஃபோலேட் அதிகம் இருப்பது உங்களின் தாம்பத்ய வாழ்க்கையை சிறப்பாக வைத்திருக்க உதவும். ஈரலை வேகவைத்து சாப்பிட்டால் குறைந்த கொழுப்புதான் இருக்கும். இதனால், இதை சாப்பிட்டால் உடல் எடையும் கட்டுக்கோப்பாக இருக்கும்.
அந்த வகையில், இங்கு சிக்கன் ஈரல் மற்றும் மட்டன் ஈரல் இரண்டில் எதில் அதிக நன்மைகள் இருக்கின்றன, இவற்றை யார் யார் கண்டிப்பாக சாப்பிட வேண்டும், யார் சாப்பிடக்கூடாது ஆகியவற்றை இங்கு காணலாம். தேசிய மருத்துவ நூலகத்தின் தகவல்களின்படி, மட்டன் ஈரலில் இரும்புச்சத்து, பொட்டாஸியம், தாமிரம், வைட்டமிண் ஏ, வைட்டமிண் டி, வைட்டமிண் பி12 ஆகியவை உள்ளன. ரத்தச்சோகை உள்ளவர்கள் மட்டன் ஈரலை சாப்பிடலாம், ரத்தத்தில் ஆக்ஸிஜன் சப்ளை அதிகமாகும். வைட்டமிண் பி12 இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மட்டன் ஈரலில் உள்ள கனிமங்கள் உடலின் நொதி சார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்யும்.
சிக்கன் ஈரலோ, மட்டன் ஈரலோ அவரவர் தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம். அதேநேரத்தில், ஈரலை வறுத்து சாப்பிடுவதற்கு பதில் நன்கு சமைத்து, அதாவது காய்கறிகளுடன் வேகவைத்து சாப்பிடுவது கூடுதல் நன்மை தரும். வாரத்தில் ஓரிரு நாள்கள் மட்டும் சாப்பிட்டால் போதும். மேலும், சிக்கன் ஈரலை விட மட்டன் ஈரலில்தான் அதிக ஊட்டச்சத்து இருக்கிறது என்றாலும் குறைவான அளவில் எடுத்துக்கொள்வதே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.
சிக்கன், மட்டன் ஈரலை அதிகமாக சாப்பிட்டால் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகமாகும். இதயம், சிறுநீரகம், கொழுப்பு கல்லீரல், கொலஸ்ட்ரால் சார்ந்த பிரச்னைகள் இருந்தால் சிக்கன் ஈரல், மட்டன் ஈரலை குறைவாக சாப்பிட வேண்டும். சிக்கன் ஈரலில் வைட்டமிண் ஏ அதிகம் இருக்கிறது. இது குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும். எனவே, கர்ப்பிணிகள் சிக்கன் ஈரலை தவிர்க்கலாம்.
Readmore: சைபர் மோசடிகளை சமாளிக்க ”Bank.in Domain” அறிமுகம்!. ரிசர்வ் வங்கி அதிரடி!. சிறப்பம்சங்கள் என்ன?