fbpx

உங்களை பாடாய் படுத்தும் மூட்டு வலிக்கு, இதை விட சிறந்த மருந்து இருக்கவே முடியாது… கட்டாயம் இதை ஒரு முறை குடித்துப் பாருங்க..

பொதுவாகவே நமது முன்னோர், உடலில் என்ன பிரச்சனை வந்தாலும், உடனடியாக சமையலறையில் இருக்கும் பொருள்களை வைத்து தான் வைத்தியம் செய்தனர். இதனால் அவர்களின் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், நாம் ஒரு பிரச்சனைக்கு மாத்திரை சாபிட்டால், அது நமது உடலில் வேறு பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறது.

ஆம், உதாரனமாக, நாம் காய்ச்சலுக்கு மாத்திரை சாப்பிட்டால், கிட்னி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். இதனால் இனி வரும் காலங்களில் நாம் நமது முன்னோர்களை போலவே வீட்டு வைத்தியம் செய்வது நல்லது. ஆனால் அதற்கு முதலில், நமது சமயலறையில் இருக்கும் எந்த பொருள் எதற்கு தீர்வு அளிக்கும் என்று தெரிந்துக் கொள்வது நல்லது.

இன்று நாம் சமயலறையில் இருக்கும் ஒரு அற்புதமான மருந்தான மல்லி விதையை பற்றி தெரிந்துக் கொள்வோம். மல்லி விதையில், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, போலிக் அமிலம் போன்ற பல சத்துக்கள் கொத்தமல்லி உள்ளது. இதனால் இந்த கொத்தமல்லியை நாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது, பல ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

குறிப்பாக, நாம் உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவும். இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கொத்தமல்லி விதை கரைய செய்கிறது. தைராய்டு பிரச்சனையை குணப்படுத்தும் ஒரு மாமருந்து என்றால் அது கொத்தமல்லி விதை தான். மேலும், தொடர்ந்து கொத்தமல்லி எடுத்துக்கொண்டால் வயதான தோற்றம் ஏற்படுவதை நாம் தாமதிக்க முடியும்.

இது மட்டும் இல்லாமல், மாரடைப்பு, இதய நோய் பாதிப்புகள் வரமால் இருக்க நாம் தினமும் கொத்தமல்லி விதை பானம் குடிப்பது அவசியம். மேலும், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைத்திருக்க கொத்தமல்லி பானம் ஒரு சிறந்த தேர்வு. இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கத்தால் அவதிப்படுபவர்கள் இந்த கொத்தமல்லி விதை பானத்தை அடிக்கடி குடிக்கலாம்..

கொத்தமல்லி பானம் செய்ய முதலில், இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதையை உரலில் போட்டு, இடித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இடித்த கொத்தமல்லியை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு இதை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து வடிகட்டினால் கொத்தமல்லி பானம் தயார்..

இதில் இனிப்பு சுவை எதையும் சேர்க்கக் கூடாது. இதில் இனிப்பு சுவை சேர்ப்பதால் எந்த பிரயோஜனமும் இருக்காது.

Read more: உடல் உஷ்ணம் அதிகமா இருக்கா? அப்போ உடனே இப்படி தேய்த்து குளியுங்க… கட்டாயம் நல்ல பலன் கிடைக்கும்..

English Summary

best treatment for knee pain

Next Post

இதை மட்டும் அடிக்கடி சாப்பிடுங்க.. மாரடைப்பு முதல் புற்றுநோய் வரை எந்த நோயும் வராது.. டாக்டர் சிவராமன் அட்வைஸ்..

Mon Feb 24 , 2025
doctor sivaraman's advice for healthy life

You May Like