fbpx

32 மீனவர்கள் கைது… விடுவிக்க உடனடி நடவடிக்கை….! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 5 மீன்பிடி படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் கவலை அளிக்கக் கூடிய வகையில் அதிகரித்துள்ளது. நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும் அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று நான் பலமுறை கேட்டுக் கொண்ட போதிலும், இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் இன்னும் அதிக அளவில் தொடர்கிறது. இந்த ஆண்டில் மட்டும், எட்டு வெவ்வேறு சம்பவங்களில் 119 மீனவர்களும், 16 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும். நமது மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், இக்கூட்டத்தைக் கூட்டி நிரந்தர தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும். எனவே நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து விரைவில் விடுவிக்கவும் வலுவான தூதரக முயற்சிகளை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

32 fishermen arrested… immediate action to release them….! Chief Minister Stalin’s letter to the Union Minister

Vignesh

Next Post

நாட்டுக்காக விளையாடுவதை மிகவும் நேசிக்கூடியவர் கோலி!. பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குபின் ரோகித் ஷர்மா நெகிழ்ச்சி!

Mon Feb 24 , 2025
Kohli loves playing for his country the most!. Breaking Sachin's record!. Rohit Sharma is resilient after the victory against Pakistan!

You May Like