மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாக்பூருக்குச் சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்ததில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பார்கி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராமன்பூர் காட்டி பகுதியில் அதிகாலை 4 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் இருந்து மகாராஷ்டிராவின் நாக்பூருக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இறந்தவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்த மால்மா (45), நாக்பூரைச் சேர்ந்த சுபம் மேஷ்ராம் (28) மற்றும் அமோல் கோடே (42) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் லக்னாடன் நகரம் மற்றும் ஜபல்பூர் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
Read more: இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் பலி..!!