மின் கணக்கீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் செல்போன் வாங்க 10,000 ரூபாய் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கணக்கீடு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்யப்படுகிறது. மின் ஊழியர்கள் நேரடியாக கணக்கீடு செய்து வாடிக்கையாளர்களுக்கு மின் பயன்பாடு மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இ-மெயில், SMS மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டண விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது மின் கணக்கீட்டுக்கு என தனி மொபைல் செயலி பயன்படுத்தப்பட்ட வரும் நிலையில் ஊழியர்கள் அவரவர் செல்போனில் அதனை டவுன்லோட் செய்து உபயோகப்படுத்தி வருகின்றனர்.
இதற்காக அவர்களுக்கு ஆப்டிகல் பைபர் கேபிள் கொடுக்கப்பட்டிருக்கிறது. செல்போனின் இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்தால் மின் பயன்பாட்டு விபரங்கள் அந்த செயலியில் அப்டேட் செய்யப்படும். தொடர்ந்து மின்வாரிய சர்வர் மூலம் கட்டண விவரங்கள் வாடிக்கையாளர்களின் செல்போனுக்கு SMS மூலம் தெரிவிக்கப்படும். சோதனை அடிப்படையில் செய்யப்பட்ட இந்த பணி விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்த நிலையில் தனிப்பட்ட செல்போன்களை வேலைக்கு பயன்படுத்துவதால் தரவு திருட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. எனவே இதற்கான தனியாக மொபைல் வாங்கி தர வேண்டும் அல்லது டேப்லெட் வழங்க வேண்டும் என மின்சாரத் துறை ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்த மின்வாரியம் மின் கணக்கீட்டுப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்கள் செல்போன் வாங்க 10,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஒரு செல்போனை வாங்கி அதன் பில்லை கொடுத்தால் 10,000 ரூபாய் மானிய தொகை வழங்கப்படும்.
பத்தாயிரம் ரூபாய்க்கு நல்ல தரமான மொபைல் போன்கள் வாங்க முடியாது என்பதால் இந்த தொகையினை உயர்த்தி கொடுக்க வேண்டும். அதேபோல போக்குவரத்திற்கு ஏற்படும் செலவுகளையும் மின்வாரியம் தங்களுக்கு செலுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை ஊழியர்கள் வைத்து வருகின்றனர்.