fbpx

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வாக்காளர்களை கவரும் வகையில், தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆரணியில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது …

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி …

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அனைத்தும் யூகத்தின் அடிப்படையிலானவை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்த செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவற்றை அரசியல் கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. திமுக கூட்டணி உறுதியான …

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து தங்களின் அடுத்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்கள் அறிவிப்பிலும் …

பிப்.12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இதுவரை கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. …

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் பல்வேறு நாடுகளில் …

காவிரி நீரை பெற ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவை எதிர்நோக்கிக்கொண்டே இருக்கக்கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநரை நேரில் சந்தித்து தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”காவிரி விவகாரம் மக்கள் பிரச்சனையாக உள்ளது. விவசாய பெருமக்களை …

தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் , இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ’’ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பண்டிகை காலத்தில் வருமானம் பார்க்க அதிக விலை அறிவித்துள்ளார்கள். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லட்டும் ஏழை மக்கள் அரசு பேருந்தில் பயணிக்கலாம் என …

மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்ய வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய-மாநில அரசுகள் தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண …

விஜயகாந்தின் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் விஜயகாந்துக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த்துக்கு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், அவருக்கு நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு நிற்க முடியாத …