“அழகான காதல் கதை; அவர் அவ்வளவு அழகு”!. ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த தருணத்தை நினைவுகூர்ந்த சோனியா காந்தி!

Sonia Gandhi 30kb

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, தான் எழுதியுள்ள ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey of Love) என்ற சுயசரிதை நூல் குறித்து எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல் வரும் நவம்பர் 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.


இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான மறக்க முடியாத நினைவுகள் மற்றும் தனது இளமைக்காலம் முதல் தற்போதைய காலம் வரையிலான வாழ்க்கைப் பயணத்தை சோனியா காந்தி விரிவாகப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுமார் இரண்டு நிமிட வீடியோவில், கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு கிரேக்க உணவகத்தில் ராஜீவ் காந்தியை முதன்முதலில் சந்தித்த தருணத்தையும், தங்களது காதல் மலர்ந்த விதத்தையும் நினைவுகூர்ந்துள்ளார். அதில் பேசும் அவர், “ராஜீவ் காந்தி பார்க்க மிகவும் அழகாக இருந்தார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது பதிவில், “கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு சிறிய கிரேக்க உணவகத்தில் தான் எனது காதல் பயணம் தொடங்கியது. ராஜீவும் நானும் அன்பு, மகிழ்ச்சி மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த ஒரு உலகத்தை உருவாக்கினோம். வரும் நவம்பர் 10-ஆம் தேதி, அந்த உலகத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்” என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

விமானக் கட்டணம் குறையுமா? எரிபொருள் வரியை அதிரடியாக குறைத்த முதல்வர் விஜய்!. மத்திய அரசு பாராட்டு!

Sat Oct 24 , 2026
விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை (VAT) அதிரடியாகக் குறைத்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு எடுத்த இந்த நடவடிக்கையின் மூலம், சென்னை விமான நிலையத்தில் VAT வரி 29 சதவீதத்திலிருந்து 16 சதவீதமாகவும், மாநிலத்தின் பிற விமான நிலையங்களில் 1 சதவீதமாகவும் குறைக்கப்படவுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணை அறிவிப்பின்படி, இந்த வரி […]
reduce VAT fuel cm vijay 30kb

You May Like