திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், தனது அரசியல் நுழைவு தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார்.. இந்த நிலையில் அரசியலுக்கு வருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்..
இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளார்.. அதில் பேசிய அவர் “ நான் அரசியலுக்கு வர வேண்டுமா..? வேண்டாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.. நீங்கள் அரசியலுக்கு வா என்றால் வருவேன், வேண்டாம் என்றால் நான் அரசியலில் நுழைய மாட்டேன்.. சமூகத்திற்காக எனது தன்னலமற்ற சேவையை தொடர்வேன்..
எப்போது, யாருடன் இந்த பயணத்தை தொடங்க உள்ளேன் என்பதை நான் வெளிப்படுத்துவேன். ரஜினி எனக்கு எவ்வளவு நெருக்கமோ அதே அளவுக்கு நண்பர் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. முதலில் அரசியல் வேண்டாம் என்று மறுத்த என் அம்மா, தற்போது நான் அரசியலுக்கு வர அனுமதித்துவிட்டார்..
திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டுமென்றால் நான் அரசியலுக்கு வர வேண்டும். எந்த பலனையும் எதிர்பாராமல் பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறேன். ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிய போது மகிழ்ச்சி அடைந்தேன்.. ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றதும் கவலை அடைந்தேன்.. மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வர வேண்டும். எனவே நான் அரசியலுக்கு வர வேண்டுமா அல்லது வேண்டாமா.. என்பதை நீங்களே சொல்லுங்கள்..” என்று தெரிவித்துள்ளார்..
Read More : Flash : மீண்டும் ஷாக்.. இன்று ரூ.2,400 உயர்ந்த தங்கம் விலை..! ஒரே நாளில் தலைகீழ் மாற்றம்..!



