கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் ஹரீஷ்(32). அ.தி.மு.க. பிரமுகரான இவர் கடந்த 3-ந் தேதி காலை வானவில் நகர் – அண்ணாமலை நகர் இடையே கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். போலீசாரின் விசாரணையில் கடைசியாக கடந்த 2-ந் தேதி இரவு மஞ்சுளா என்பவர் வீட்டுக்குதான் ஹரீஷ் வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனால் மஞ்சுளாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ஹரிஷின் கள்ளக்காதலியான மஞ்சுளாவிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. கணவரை பிரிந்து வாழும் மன்சுளாவிற்கு (35) ஹரீசுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரீஷ்க்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.. மஞ்சுளா வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.
மஞ்சுளாவிடம் பணம் இருப்பதை அறிந்த ஹரீஷ் தனக்கு கடன் இருப்பதாக கூறி அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்திருக்கிறார். இப்படி ரூ.80 லட்சம் வரையில் மஞ்சுளா ஹரீசுக்கு பணம் கொடுத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஹரீஷ் மீது வெறுப்படைந்த மஞ்சுளா அவரை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக நண்பர் மோனிஷ் (24) என்பவரை அணுகினார்.
அப்போது ரூ.10 லட்சம் கேட்ட மோனிசுக்கு முன்பணமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மஞ்சுளா கொடுத்துள்ளார். பணத்தை வாங்கி கொண்ட மோனிஷ் கூலிப்படையை தயார் செய்துள்ளார். அதன்படி சம்பவத்தன்று மஞ்சுளா வீட்டில் சாப்பிட்டு விட்டு ஸ்கூட்டரில் திரும்பிய ஹரீசை கூலிப்படையினர் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஹரீசை கொலை செய்ய திட்டமிட்டு கொடுத்த மஞ்சுளா, மோனிஷ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read more: Breaking : நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கு.. நடிகர் திலீப் விடுதலை..! நீதிமன்றம் தீர்ப்பு..!



