கர்ப்பிணி மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர கணவன்.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்!

pregnant woman crime

ஹைதராபாத்தில் 2 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, மூசி ஆற்றில் வீசிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது..


குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் தனித்தனியாக பேக் செய்து, அவற்றை 3 முறை ஆற்றில் வீசியுள்ளார்.. பின்னர், தனது மனைவி காணாமல் போனதாகக் கூறி தனது சகோதரிக்கு போன் செய்தார். ஆனால் அவரின் சகோதரி சந்தேகமடைந்து உறவினருக்கு தகவல் தெரிவித்தபோது, ​​கணவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

டி.சி.பி பி.வி. பத்மஜா இதுகுறித்து பேசிய போது “ 27 வயதான அந்த நபர் ஒரு ஓட்டுநர் என்பதும் குடும்ப தகராறு காரணமாக அவர் தொடர்ந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து தனது 21 வயது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார்..

கொலையை மறைக்க, தனது மனைவியின் உடலை ஹெக்ஸா பிளேடால் துண்டு துண்டாக வெட்டி,. தலை, கைகள் மற்றும் கால்களை பிரதாப்சிங்கராமில் உள்ள மூசி ஆற்றில் வீசிவிட்டு, தலை மற்றும் கால்கள் இல்லாமல் தனது அறையில் வைத்திருந்தார்.. “ என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “ இந்த கொலையை காணாமல் போன சம்பவமாக சித்தரிக்க கணவர் மீண்டும் முயன்றார், ஆனால் விசாரணையின் போது அவர் தனது மனைவியைக் கொன்றதாக ஒப்புக்கொண்டதாக அவர் கூறினார்.

கொலை மற்றும் ஆதாரங்களை மறைத்ததற்காக கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது., மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து உடல் பாகங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்..

மேலும் பேசிய டிசிபி பத்மஜா “இறந்தவர் (குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவியா) என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும், மேலும் டி.என்.ஏ சோதனை நடத்தப்படும்.. ​​என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் குழுக்கள் தேடுதல் வேட்டைகளைத் தொடங்கியுள்ளதாகவும், இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டவரும் கொலைசெய்யப்பட்ட பெண்ணும் விகாராபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் 2024-ம் ஜனவரி மாதம், காதலித்து திருமணம் செய்து கொண்டனர்… அவர்கள் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்து போடுப்பலில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். ஒரு மாத காலம் ஒன்றாக வாழ்ந்த பிறகு, இந்த தம்பதிக்குள் பிரச்சனை வர தொங்கி உள்ளது..

ஏப்ரல் 2024 இல், அந்தப் பெண் விகாராபாத் போலீசில் குடும்ப வன்முறை புகார் அளித்தார், அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் பெரியவர்கள் தலையிட்டு இந்த விவகாரம் ஒரு கிராம பஞ்சாயத்தில் தீர்க்கப்பட்டது.

அந்தப் பெண் சிறிது காலம் பஞ்சகுட்டாவில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்தார், ஆனால் அவரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், அவரை வேலையை விட்டு நிற்கும் கட்டாயப்படுத்தினார். இதனிடையே அவர் மார்ச் 2025 இல் கர்ப்பமானார், ஆனால் தம்பதிக்குள் சண்டைகள் தொடர்ந்தன. ஆகஸ்ட் 22 அன்று, மருத்துவ பரிசோதனைக்காக விகாராபாத்திற்குச் சென்று பின்னர் தனது பெற்றோருடன் தங்க விரும்புவதாக தனது கணவரிடம் கூறியுள்ளார்.. ஆனால் கணவர் அதனை மறுத்துவிட்டார்.. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.. அதே நாளில், அந்த நபர் அவளைக் கொல்ல முடிவு செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Read More : பக்கத்து வீட்டு சிறுமியுடன் மலர்ந்த காதல்..!! கல்யாண ஆசையால் கர்ப்பம்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட் சம்பவம்..!!

RUPA

Next Post

நவபஞ்சம யோகம்: பணத்தை கட்டு கட்டாக அள்ளப் போகும் 3 ராசிகள்.. தொட்டதெல்லாம் வெற்றி தான்!

Mon Aug 25 , 2025
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலை மற்றும் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆகஸ்ட் 27 ஆம் தேதி, செல்வத்தின் கிரகமான சுக்கிரனும், ஆன்மீக கிரகமான நெப்டியூனும் ஒன்றுக்கொன்று 120 டிகிரி சஞ்சரிக்கும். இந்த அரிய சேர்க்கை நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்குகிறது. இந்த யோகம் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகவும், மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகத்தின் செல்வாக்கின் காரணமாக 3 குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் வெற்றியும் கிடைக்கும் என்று […]
Raja yogam

You May Like