11 வருடங்களாக காத்திருந்த கனவு..! இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ்..! செஸ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற்றம்..!

11 வருடத்திற்கு பிறகு கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார் தமிழக கிராண்ட் மாஸ்டர் குகேஷ். இதனையடுத்து உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தமிழக செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் காணடவில் நடைபெற்று வந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வின்றுள்ளார். உலகில் இருக்கக்கூடிய முன்னணி 7 கிராண்ட் மாஸ்டர்கள் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்றனர். இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்று வெற்றிபெறுபவர் தான், தற்போது உலக சாம்பியனாக இருக்கக்கூடியவரிடம், செஸ் உலக சமப்பின் பட்டத்திற்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும்.

அதன்படி நடந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் முதல் முறை பங்கேற்ற இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ், 14 சுற்றுகள் முடிவில் 9 புள்ளிகள் பெற்று கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்றார். இதன் காரணாமாக செஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். 5 முறை உலக சாம்பிணக் இருந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு (2013க்கு பிறகு ) எந்த ஒரு இந்திய வீரரும் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் வரை சென்று வெற்றி பெற்றதில்லை.

ஆனால் தற்போது 11 வருடத்திற்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த 17 வயதான இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளார்.

Kathir

Next Post

கோடை காலத்தில் ஈசியாக உடல் எடையை குறைக்க இதை சாப்பிடுங்க..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!

Mon Apr 22 , 2024
இன்றைய காலகட்டத்தில், உடல் எடையை குறைப்பது ஒவ்வொருவருக்கும் சாவாலான காரியம். உண்மையில், எடையைக் குறைக்க உடற்பயிற்சியோ அல்லது உணவில் கட்டுப்பாடாக இருப்பதோ தேவையில்லை. அதற்கு பதில் நீங்கள் உங்கள் உணவில் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதன் மூலமும், வழக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். எனவே, இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் இந்த கோடையில் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். […]

You May Like