சைக்கோ தம்பதியின் பிடியில் சிக்கிய 14 வயது பணிப்பெண் ஜார்க்கண்டில் கொடுமை!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வீட்டுக்கு வேலைக்கு வந்த சிறுமியை அந்த வீட்டு உரிமையாளர்கள் கொடுமைப்படுத்தி தாக்கியிருப்பது  பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் குர்கானில் வீட்டு வேலை செய்து வரும் 14 வயது சிறுமி காயமடைந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு வந்த தகவலை அடுத்து  அங்கு சென்று விசாரித்தது காவல்துறை. பின்னர் அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட காவல்துறை . இந்த விசாரணையின் அடிப்படையில் குர்கானைச் சார்ந்த மணிஷ் கட்டார் மற்றும் கமல்ஜீத் கவுர்  ஆகியோர் இந்த சிறுமியை தங்கள் வீட்டு வேலைக்காக பணியில் அமர்த்தியது தெரியவந்துள்ளது. இதில் மனிஷ் கட்டார் அங்குள்ள இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் துணை மேலாளராக பணிபுரிந்து வருவதும் இவரது  மனைவி அங்குள்ள மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டு வேலைக்காக இந்த சிறுமியை பணியமர்த்தியை இவர்கள் அந்த சிறுமிக்கு ஒழுங்காக வேலை செய்யவில்லை எனக்கூறி ஏராளமான கொடுமைகளை செய்துள்ளனர்.

உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சிறுமியை மிகவும் கொடுமைப்படுத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் சிறுமிக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிட உணவு கொடுத்துள்ளனர். என் உடல் பாகங்களை பிளே டால் கிழித்தும் அவர் உடல் முழுவதும் நெருப்பைக் கொண்டு சூடு வைத்தும் கொடுமை செய்து இருக்கிறார்கள. மேலும் அவர்களிடம் என்னை ஏன் இப்படி கொடுமைப்படுத்துகிறீர்கள் என்று கேட்டபோது  நீ ஒழுங்காக வேலை செய்யவில்லை அதற்கு தண்டனையாக தான் உன்னை இப்படி கொடுமைப்படுத்துகிறோம் எனக் கூறி மிகவும் கஷ்டப்படுத்தியதாக அந்த சிறுமி காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். பல நேரங்களில் தனக்கு உணவு கிடைக்காமல் வீட்டில் இருக்கும் எஞ்சிய உணவுகளையும்  உண்டு வாழ்ந்ததாக  சோகத்துடன் காவல்துறையில் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் குர்கான் காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ஆன சுபாஷ் போகன்  இந்த செய்தி பற்றி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்” குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர் கைது செய்யப்பட்டு  கணவர்  காவல்துறையின்  கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவரது மனைவி நீதிமன்ற காவலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் வாக்குமூலம்  கடந்த புதன்கிழமை மேஜிஸ்ட்ரேட் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்த அவர்  இவர்கள் இருவரின் மீதும் போஸ்கோ சட்டத்தின் பிரிவு 12. ஐபிசி பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 342 (தவறான சிறைவாசம்), 34 (பொது நோக்கம்), சிறார் நீதிச் சட்டம் பிரிவுகள் 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Baskar

Next Post

காதலியின் பாய் பெஸ்டியை சுட்டுக் கொன்ற இளைஞர் - ஒரு தலை காதல் விவகாரத்தால் உத்தரபிரதேசத்தில் பயங்கரம்!

Fri Feb 10 , 2023
உத்திர பிரதேச மாநிலத்தில் ஒரு தலை காதல் விவகாரத்தால் காதலியின்   நண்பர் ஒருவரை  இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்து உரை சார்ந்தவர் ராகுல் வயது 23. அதே பகுதியைச் சார்ந்தவர் மோனிகா வயது 20 இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராகுல் மோனிகாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு […]

You May Like