அனல் பறக்கும் இடைத்தேர்தல்..!! தாராபுரத்தில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!! இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!!

CM Vijay 2026 4

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று (செப்.30) தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.


வரும் 6ம் தேதி தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆளும் கட்சியான தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் சத்யபாமாவிற்கு ஆதரவு திரட்டுவதற்காக, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் இன்று தொகுதிக்கு நேரில் வருகை தந்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதையொட்டி தாராபுரம் – உடுமலைப்பேட்டை சாலையில் அமைந்துள்ள மாருதி நகர் பகுதியில், சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் மாநாடு போன்ற பிரம்மாண்ட பொதுக்கூட்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடைக்காக ராட்சத கிரேன் வாகனங்கள் மூலம் இரும்பு பீம்கள் கொண்டு வரப்பட்டு, அதிநவீன மேற்கூரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து முடிந்தது.

‘கியூஆர்’ குறியீட்டுடன் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர் பகுதி, ஒழுங்குபடுத்தப்பட்ட தடுப்புகள் மற்றும் தனித்தனி வாகன நிறுத்துமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் பங்கேற்பதால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதை தொடர்ந்து, நகர் முழுவதும் மற்றும் முக்கிய வழித்தடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடையும் முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரம் சென்றடைகிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, தாராபுரம் நகரின் பிரதான சாலைகளின் இருபுறங்களிலும் பாதுகாப்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றத்திற்கான ஏற்பாடுகளையும் மாவட்ட காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

Read More : முதல்வரின் கோரிக்கையை நிராகரிக்கணும்..!! இடைத்தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையம் அதிரடி..!! ஐகோர்ட்டில் காரசார வாதம்..!!

Next Post

சாலட் முதல் ஓட்ஸ் வரை.. ஆரோக்கிய உணவால் வயிறு உப்புசம் ஏன் ஏற்படுகிறது?

Wed Sep 30 , 2026
ஆரோக்கியமான உணவு என்றாலே அது அனைவருக்கும் ஒரே மாதிரி எளிதில் ஜீரணமாகிவிடும் என்று சொல்ல முடியாது. முளைகட்டிய தானியங்கள், ஓட்ஸ், பச்சைக் காய்கறி சாலட்கள் போன்றவை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. ஆனால், சிலருக்கு இவற்றை சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசம், வாயுத்தொல்லை அல்லது வயிறு கனமாக இருப்பது போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்காக அந்த உணவுகள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாக அர்த்தமில்லை. பெரும்பாலும், நார்ச்சத்து குறைவாக உள்ள […]
WhatsApp Image 2026 09 23 at 4.51.16 PM

You May Like