Flash : ஒரே நாளில் ரூ.5000 உயர்வு..! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..!

gold jewelry reflective surface 640852 1749

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக உயர்வதும், பின்னர் சற்று குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனையானது. அதன்பின்னர் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த தங்கம் விலை தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.14,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.113200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. எனினும் இன்று வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் வெள்ளி விலை ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2.80 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது..

RUPA

Next Post

"இப்ப எதையும் வெளியே சொல்ல முடியாது.. ஆனால் இபிஎஸ் முதல்வராவார்.." தம்பிதுரை பரபரப்பு பேட்டி..!

Fri May 8 , 2026
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை.. இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. விலை போவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மறுபுறம் […]
Thambi Durai

You May Like