“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்” என்பார்கள்… ஆனால், ஒரு முக்கிய உண்மையை மறைத்து நடந்த திருமணம் 25 நாட்களிலேயே பிரச்சினையாக மாறிய சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் முடிந்து சில வாரங்களிலேயே மனைவி குறித்து தான் எதிர்பாராத தகவலை அறிந்ததாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல்துறையை அணுகியுள்ளார். திருமணத்திற்கு முன்பு முக்கியமான தகவல் தன்னிடம் மறைக்கப்பட்டதாகவும், இதனால் தான் ஏமாற்றப்பட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு முதல் இரவில், மாதவிடாய் காரணமாக தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும் என்று மனைவி தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். அதன்பிறகும் உடல்நலக்குறைவு, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை மனைவி கூறியதால், அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மனைவியின் உடல் தோற்றம் மற்றும் சில நடவடிக்கைகளில் மாற்றங்கள் இருப்பதை கவனித்ததாக இளைஞர் தெரிவித்துள்ளார். இதனால் திருமணத்திற்கு முன்பு தனக்கு தெரியாத ஏதேனும் விஷயம் மறைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
திருமணமாகி சுமார் 25 நாட்கள் ஆன நிலையில், மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது பாலின அடையாளம் குறித்து இளைஞருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மனைவியின் ஆடையை விலக்கிப் பார்த்தபோது, அவர் திருநங்கை என்பதை அறிந்ததாகவும் கூறியுள்ளார். இந்த விவரம் திருமணத்திற்கு முன்பு தனக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையடுத்து, முக்கியமான தகவலை மறைத்து தன்னை திருமணம் செய்ததாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளார். திருமணத்திற்கு முன்பு இரு தரப்பினருக்கும் என்ன தகவல்கள் தெரிவிக்கப்பட்டன, திருமண ஏற்பாட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, புகாரில் கூறப்பட்ட தகவல்கள் உண்மையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.டவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: 55 வயதில் ஏற்பட்ட கள்ளக்காதல்… திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நடந்த அதிர்ச்சி சம்பவம்!



