“இப்ப எதையும் வெளியே சொல்ல முடியாது.. ஆனால் இபிஎஸ் முதல்வராவார்..” தம்பிதுரை பரபரப்பு பேட்டி..!

Thambi Durai

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. எனினும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளித்த நிலையில், பெரும்பான்மைக்கு இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் தேவை..


இதனிடையே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் தவெக குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.. விலை போவதை தடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. மறுபுறம் திமுக – அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கப் போவதாக ஒரு தகவல் வேகமாக பரவியது.. எனினும் அது வெறும் வதந்தி என்பது தெரியவந்தது..

இந்த சூழலில் நேற்று புதுச்சேரியில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களை இபிஎஸ் சந்தித்து பேசினார்.. மேலும் இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.. அப்போது ” கண்டிப்பாக திமுகவுடன் கூட்டணி எதுவும் கிடையாது என எம்.எல்.ஏக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்..

இந்த நிலையில் சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் மூத்த தலைவர் சந்தித்து பேசினார்.. அப்போது பேசிய அவர் ” பல ஆலோசனைகள் நடந்து வருகின்றன.. ஆனால் அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது.. நல்ல விஷயங்கள் நடக்கும் என்று நம்புகிறோம்.. எங்கள் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்.. அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.. எடப்பாடி பழனிசாமி மீண்டு முதல்வராவார்.. நல்லாட்சி வரும்.. நல்லாட்சி தருவார்..” என்று தெரிவித்தார்..

அதிமுக ஆட்சியமைக்க திமுக ஆதரவு தர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இந்த சூழலில் தம்பிதுரையின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. ஒருவேளை திமுகவோ அல்லது அதிமுகவோ கூட்டணி அமைத்து தமிழகத்தில் ஆட்சியமைக்க கோரினால் 108 எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று தவெக எச்சரித்துள்ளது..

RUPA

Next Post

"விஜய்யை நிறுத்த வாழ்நாள் எதிரிகள் ஒன்றிணைகிறார்கள்.. யார் துரோகி..? மாணிக்கம் தாகூர் சாடல்..

Fri May 8 , 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.. எனினும் தவெகவுக்கு ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. இதற்காக தவெக சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் தனித்தனியே கடிதமும் […]
manickam tagore

You May Like