Rain: தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… 26-ம் தேதி வரை கனமழை…!

rain 1

தமிழகத்தில் இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்; தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கடைசி ஓவரில் த்ரில்!. 6 முறை சாம்பியனான இலங்கையை வீழ்த்தி, வங்கதேசம் அபாரம்!. பைனலை நோக்கிய முதல் அடி!.

Sun Sep 21 , 2025
ஆசிய கோப்பை ‘சூப்பர்-4’ போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய வங்கதேச அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ‘திரில்’ வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை (‘டி-20’) 17வது சீசன் நடக்கிறது. துபாயில் நடந்த முதல் ‘சூப்பர்-4’ போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு பதும் நிசங்கா (22), குசால் […]
Bangladesh vs Sri Lanka

You May Like