அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்…! தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு…!

heavy rain

தமிழகத்தில் இன்று முதல் 5-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5-ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை. தமிழக கடலோர பகுதிகளில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 செமீ, நீலகிரி மாவட்டம் வூட் பிரையர் செருமுள்ளி, கோவை மாவட்டம் சோலையார். வால்பாறையில் தலா 3 செமீ, தேனி மாவட்டம் பெரியாறு, கோவை மாவட்டம் சின்கோனா, தென்காசி மாவட்டம் குண்டாறு அணையில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.

Vignesh

Next Post

RTI சட்டம்..! அதிகாரிகள் மாதம் தோறும் 5-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்...! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Fri Oct 31 , 2025
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் தகவல்களை துரிதமாக வழங்குவதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: ”பள்ளிக் கல்வித்துறையில் உள்ள முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர்கள், மேல்முறையீட்டு அலுவலர்கள் விவரங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது இந்த அலுவலர்களுக்கு […]
tn school 2025

You May Like