தட்டாஞ்சாவடியில் மாபெரும் வெற்றி!. டெபாசிட்டை இழந்த திமுக மற்றும் தவெக ஆதரவு காங்கிரஸ்!

1035559

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விநாயகத்தை விட 8,482 வாக்குகள் அதிகம் பெற்று இமாலய வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


இத்தொகுதியில் பதிவான வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸின் அசோக் ஆனந்த் 13,358 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 4,876 வாக்குகளையும் பெற்றனர். இத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சேது 2,664 வாக்குகள் மட்டுமே பெற்று தனது டெபாசிட்டை இழந்துள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட இதர வேட்பாளர்களும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறாமல் டெபாசிட்டை இழந்துள்ளனர். தவெக ஆதரவுடன் களமிறங்கிய காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை!. பாமக எடுத்த முடிவால் அதிமுகவுக்கு பேரதிர்ச்சி!

Fri Oct 9 , 2026
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஆரம்பம் முதலே அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, தாராபுரத்தில் தவெக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி, தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலையில் உள்ளார். சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆளும் தவெக கட்சியைச் சேர்ந்த பி. சத்தியபாமா 2,112 வாக்குகள் வித்தியாசத்தில் […]
tn by election 30kb

You May Like