தூள்…! திருநங்கைகளுக்கு தனி அரண் இல்லம் தொடக்கம்…! அசத்தும் தமிழக அரசு…!

transgender 2025

திருநங்கையர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக  சென்னை மற்றும் மதுரையில் ரூ.43.88 இலட்சம் செலவில் “அரண்” திருநங்கையர்களுக்கான இல்லங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.


சமூகத்தில் திருநங்கையர்கள் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ வேண்டும் என்ற உயரிய நோக்குடன், மரபு சார்ந்த “அரவாணிகள்” என்ற சொல்லுக்கு மாற்றாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “திருநங்கை” என்ற மரியாதைக்குரிய சொல் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. திருநங்கைகளுக்கும் முழுமையான சமூகப் பாதுகாப்பையும் அங்கீகாரத்தையும் வழங்கி, அவர்களின் உழைப்பையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக, 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று தமிழ்நாட்டில் “திருநங்கைகள் நல வாரியம்” முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அமைக்கப்பட்டது. இந்த வாரியத்தை அமைத்த முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

திருநங்கையர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு அரசு திருநங்கைகள் நல வாரியத்தின் வாயிலாக திருநங்கை அடையாள அட்டைகள் வழங்குதல், ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்குதல், குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவக் காப்பீடு வழங்குதல், தையல் இயந்திரம் மற்றும் சொந்த தொழில் தொடக்க மானியம் வழங்குதல், சுயஉதவிக்குழு அமைத்தல் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்குதல், அரசு பேருந்துகளில் கட்டணமில்லா “விடியல் பயணம்” “திருநங்கைகளுக்கான உயர்கல்வி திட்டம்” மூலம் உயர்கல்வி பயிலும் திருநங்கைகளின் கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்வதோடு, புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதம் ரூ.1,000 கல்வி ஊக்கத் தொகை, உயர்கல்வி பயிலும் அனைத்து திருநங்கைகளுக்கும் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

திருநங்கைகள் நலன் காத்திடும் தொடர் நடவடிக்கைகளின் அடுத்தபடியாக, திருநங்கைகள் எதிர்நோக்கும் சமூக, மனநலம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பான, மதிப்பும் மரியாதையும் நிறைந்த, ஆதரவான வாழ்விட சூழலை உருவாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசு “அரண் இல்லம்” எனப்படும் சிறப்பு மையங்களை நிறுவத் தீர்மானித்து, முதற்கட்டமாக, சென்னை – செனாய் நகர் மற்றும் மதுரை மாநகர் – அண்ணா நகர் ஆகிய இடங்களில் 43.88 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள அரண் இல்லங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கை/திருநம்பி/இடைபாலின நபர்களுக்கு 1 வாரம் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை பாதுகாப்பான மற்றும் தற்காலிக தங்குமிடம் வழங்குதல் தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை பெற்ற எந்த மாவட்டத்தைச் சேர்ந்த நபரும் பயன்பெறுவதோடு, ஒவ்வொரு இல்லத்திலும் 25 நபர்கள் தங்க அனுமதிக்கப்படுவர். இந்த இல்லங்களில், உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு, பள்ளி மற்றும் கல்லூரியில் இடைநின்றவர்கள் கல்வியைத் தொடர உதவுதல், உயர் கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்துதல், உள்ளுறைவோரின் தேவைகளுக்கேற்ப உளவியல் மற்றும் தொழில்முறை ஆலோசனைகள் வழங்குதல், சுயதொழில் தொடங்க வழிகாட்டுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும்.

Vignesh

Next Post

குட் நியூஸ்...! மின்னணு சிம் சேவையை தொடங்கியது பிஎஸ்என்எல் நிறுவனம்.‌‌..! முழு விவரம் இதோ...

Tue Oct 14 , 2025
பிஎஸ்என்எல் நிறுவனம் மின்னணு சிம் சேவையை தொடங்கியுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மின்னணு சிம் எனப்படும் சந்தாதாரரின் அடையாளங்கள் பதியப்பட்ட சிம் கார்டுகளின் சேவை செப்டம்பர் 27-ம் தேதி தொடங்கியதாக அறிவித்துள்ளது.இந்தப் புதிய தொழில்நுட்பம் அடிப்படையிலான சேவைகள், இதற்கான வசதிகளுடன் கூடிய மொபைல் சாதனங்கள் மற்றும் பிற சாதனங்களை வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தச் சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் […]
bsnl annual plans 1721558842 1

You May Like