மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில், கள்ள தொடர்பு காரணமாக மனைவி கணவனை கொன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 35 வயதான கைலாஷ் பஞ்சாரா கடந்த ஆகஸ்ட் 22 அன்று உயிரிழந்தார். இயல்பான மரணம் என கருதி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஆனால், இறுதிச் சடங்கின்போது அவரது கழுத்தில் கயிற்றின் அடையாளங்கள் இருந்ததை உறவினர்கள் கவனித்தனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணையில் கைலாஷின் மனைவி சம்போ பாய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குமூலம் எடுக்கப்பட்டபோது, அவர் அதிர்ச்சி தரும் தகவலை வெளிப்படுத்தினார். கடந்த ஒரு வருடமாக உக்காவாட் பகுதியைச் சேர்ந்த பிரதீப் பார்கவ் என்பவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், உடலுறவிலும் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
சம்பவ நாளன்று கைலாஷ், மனைவியுடன் உடலுறவு கொள்ள முயன்றுள்ளார். உடல்நிலை சரியில்லை என கூறிய சம்போ பாயுடன் தகராறு ஏற்பட்டது. சண்டையின் போது கைலாஷ், மனைவியை கயிற்றால் நெரிக்க முயன்றதாகவும், அதனைத் தடுத்த சம்போ பாய், பின்னர் வாய்ப்பைப் பயன்படுத்தி கணவரை பின்னால் இருந்து கயிற்றால் நெரித்து கொன்றதாகவும் போலீசில் ஒப்புக்கொண்டார்.
பின்னர், சம்பவம் குறித்து தனது காதலர் பிரதீப்பிடம் தெரிவித்துள்ளார். உடலை உடனடியாக தகனம் செய்யவும், யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்றும் பிரதீப் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கைலாஷ் இயற்கையாகவே இறந்ததாக கிராமத்தினரிடம் கூறி, பிரேத பரிசோதனை இல்லாமல் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. சம்போ பாய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் சம்போ பாயையும், அவரது காதலர் பிரதீப்பையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: பண விஷயங்களில் இந்த தவறை செய்யாதீங்க.. லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க..!