புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வி (41). இவரது மகள் ஒதியம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்1 படிக்கிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தமிழ்செல்வி கணவரிடமிருந்து வரும் ஜீவனாம்சம் மூலம் மகளை படிக்க வைத்து வருகிறார்.
வழக்கம் போல் மகளை பள்ளியில் விட்டு சென்ற தமிழ்செல்வி மாலையில் ஸ்கூலுக்கு மகளை கூப்பிட வரவில்லை. பள்ளி நிர்வாகம் தரப்பில் தமிழ்செல்வியின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. அதன் பிறகு தமிழ்செல்வியின் தம்பி மதன்ராஜ் பள்ளிக்கு வந்து அக்கா மகளை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
வீட்டிலும் தமிழ்செல்வி இல்லாததால் அதிர்ச்சி அடைந்த மகள் மற்றும் மதன்ராஜ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை துவங்கினர். அவர் யாருடன் கடைசியாக பேசினார்? யாரிடமிருந்து போன் வந்துள்ளது என்பதை கண்டறிந்தனர். போலீசார் விசாரணையில் ஐயப்பன்(45) என்ற ஃபர்னிச்சர்ஸ் கடைக்காரர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து ஐயப்பனை போலீசார் பிடித்து, விசாரித்தனர்.. எடுத்ததுமே தமிழ்செல்வியை கொன்றது நான்தான் என்று ஐயப்பன் ஒப்புக்கொண்டார். விசாரணையில் தமிழ்செல்விக்கும் ஐயப்பனுக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்..
குடும்ப செலவுக்கு ஐயப்பனிடமிருந்து தமிழ்செல்வி பணம் வாங்கி வந்துள்ளார். அப்படித்தான் சமீபத்தில் ஒன்றரை லட்சம் வாங்கியிருந்தாராம். சம்பவத்தன்று மகளை பள்ளியில் விட்டுவிட்டு ஐயப்பனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது ஐயப்பன், தா கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஐயப்பன், தமிழ்ச்செல்வியை கடுமையாக தாக்கி, கழுத்தையும் நெரித்து கொன்றுள்ளார்.
பிறகு சடலத்தை ஒரு பாலித்தீன் சாக்கு பையில் மூட்டையாக கட்டி, வில்லியனூர் கோர்க்காடு பகுதியிலுள்ள வாய்க்காலில் வீசியுள்ளார். சாக்கு மூட்டையை போலீசார் கைப்பற்றி, அதிலிருந்து சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து ஐயப்பனிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: ராமநாதபுரம் மீனவனுக்கு கனவிலும் எதிர்பார்க்காத சம்பவம்.. கடைசியில் ரெண்டு உயிர் போச்சு..!



