ஒரு லிட்டர் ரூ.656-க்கு விற்கப்பட வேண்டிய நெய் ரூ.700-க்கு விற்கும் ஆவின்…! நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!

nainar nagendran mk Stalin 2025

ஜி.எஸ்.டி பலனை மக்களுக்கு வழங்காமல் ஊட்டச்சத்தைப் பறிக்கும் ஆவின் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தங்களது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்காமல் இழுத்தடித்த திமுக அரசு, மக்களின் கண்டனக் குரல் எழும்பியதும் பண்டிகைக் கால போர்வையில் விலையைக் குறைப்பது போல நாடகமாடியது ஊரறிந்த விஷயம்.

இந்நிலையில், தற்போது கமுக்கமாக ஆவின் நெய் விலையை உயர்த்தி, மக்களின் நலனை உறிஞ்சும் தனது கோர முகத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது திமுக அரசு. உதாரணமாக ஜி.எஸ்.டி 12% ஆக இருந்த போது ஒரு லிட்டர் நெய் ரூ.700-ற்கு விற்கப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி 5% குறைக்கப்பட்ட பின் ஒரு லிட்டர் நெய் ரூ.656-ற்கு விற்கப்பட வேண்டிய நிலையில், அதே ரூ.700-ற்கு விற்று மக்களின் மீது நிதிச் சுமையை ஏற்றும் திமுக அரசின் அகங்காரம் கண்டனத்திற்குரியது.

நந்தினி, அமுல் போன்ற பிற மாநிலப் பால் கூட்டுறவு நிறுவனங்கள் புதிய ஜி.எஸ்.டி வரிகளுக்கு ஏற்றவாறு மூன்று மாதங்களுக்கு முன்பே பால் பொருட்களின் விலையைக் குறைத்த நிலையில் தற்போது வரை விலையைக் குறைக்காமல் மக்களுக்கு திமுக அரசு துரோகமிழைத்து வருவது ஏற்புடையதல்ல. எனவே, புதிய ஜி.எஸ்.டி சீர்திருத்தத்திற்கு இணங்க ஆவின் பொருட்களின் விலையை உடனடியாகக் குறைக்காவிடில், மக்கள் நலனுக்காகத் தமிழக பாஜக பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியப்படுத்துகிறேன் என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

2026இல் தங்கம் விலை 50% உயருமா..? அதிர்ச்சி கணிப்பை வெளியிட்ட பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன்..!!

Wed Dec 3 , 2025
கடந்த ஓராண்டாக தொடர்ந்து உச்சத்தில் பறந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று ஆசுவாசமடைந்து நிலையாக உள்ளது. சில நாட்கள் லேசான ஏற்றம் கண்டாலும், பெரியளவிலான விலை உயர்வு இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. இந்தச் சூழலில், வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், இனியும் அதன் ஏற்றம் தொடருமா என்பது குறித்துப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் […]
Anand Srinivasan 1

You May Like