ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் கால்நடை மருத்துவர்களுக்கு ₹ 43000/- வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கவும்!

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஆவின் கூட்டுறவு ஒன்றியத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு காலியாக உள்ள 5 இடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை ஆவின் வெளியிட்டிருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நேரடித் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கால்நடை மருத்துவ படிப்புடன் ஏ ஹெச் மற்றும் கம்ப்யூட்டர் தெரிந்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கண்டிப்பாக இரு சக்கர வாகன உரிமம் வைத்திருக்க வேண்டும் . இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ. 43,000/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பு ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பாகும். தேர்வு செய்யப்படும் நபர்கள் ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதியும் திறமையும் உடைய நபர்கள் உரிய கல்விச் சான்றுகள் மற்றும் வாகன ஓட்டுனர் உரிமத்துடன் 24.03.2023 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வு நடைபெறும் முகவரி இடம்: வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்-9. தொலைபேசி எண். 9345161677 ஆகும்.

1newsnationuser5

Next Post

அடிதூள்...! வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்...!

Tue Mar 21 , 2023
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. பாஜக, காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. இந்தநிலையில் ராகுல் […]
women bank account 1602765091

You May Like