’எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்’..!! எடப்பாடிக்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் ஓபிஎஸ்..!!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், மீண்டும் ஒரு மனு அளித்துள்ளார்.

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே, ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என ஓபிஎஸ், தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

மேலும், தனக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாவிட்டால், அந்த சின்னத்தை முடக்குமாறும் ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை நிராகரித்த தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ், மீண்டும் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimen தான் ஏற்கனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : Rain | கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளு குளு நியூஸை சொன்ன வானிலை மையம்..!! மகிழ்ச்சியில் மக்கள்..!!

Chella

Next Post

சர்வாதிகார சக்திகளுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி புதிய பிரச்சாரம்!

Fri Mar 29 , 2024
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவர் அதிகமாக துன்புறுத்தப்படுவதாகவும் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 22-ந் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ […]

You May Like